Monday, November 8, 2010

இன்று நமது சிந்தனைக்கு

தாங்கள் பெறப்போகும் மாதாந்திர சம்பளத்தை மனதில் வைத்துக்கொண்டு கற்பிக்கும் ஆசிரியர்களும், தாங்கள் பெறப்போகும் அலுவல் வேலைகளை மனதில் வைத்துக் கொண்டு கற்கும் மாணவர்களும், ஆகிய இரு சாராருமே தவறான பாதைகளைப் பின்பற்றுகிறார்கள். உண்மையில் ஆசிரியர்களின் பணி என்ன என்றால், போதித்து, மாணவர்களை தங்களது மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவற்றை பதப்படுத்தி மேன்மை நிலைக்குக் கொண்டுவர ஊக்குவிப்பதே ஆகும். அதேபோல், மாணவர்களின் பணி என்ன என்றால், தங்களுக்குள்ள தெய்வீகத்தை வெளிக்காட்டி, தங்கள் திறமை மற்றும் அறிவைக் கொண்டு சமுதாய சேவை செய்ய தங்களை தயார்ப் படுத்திக்கொள்வதே ஆகும்

No comments:

Post a Comment